search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பைக் திருடிய வாலிபர் கைது"

    கிருஷ்ணகிரியில் வங்கி மற்றும் வீட்டு முன் நிறுத்தியிருந்த பைக்குகளை திருடிய கர்நாடக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    கிருஷ்ணகிரி அருகே உள்ள பீமான்டப்பள்ளி புளியஞ்சேரி பகுதியை சேர்ந்தவ டிரைவர் சரவணன் (வயது 34). இவர் கடந்த 12-ந் தேதி கிருஷ்ணகிரியில் உள்ள வங்கி எதிரே உள்ள பகுதியில் ரூ. 65 ஆயிரம் மதிப்புள்ள தனது பைக்க நிறுத்தி விட்டு அந்த பகுதியில் தனது வேலை முடித்து கொண்டு திரும்பி வந்து பார்த்தபோது தனது பைக் அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதனையடுத்து சரவணன் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் அளித்தார். மேலும் இதேபோல் கிருஷ்ணகிரி சேலம் சாலையில் உள்ள பழக்கடை நடத்திவரும் சுகுமார் (63) என்பவரது ரூ. 48 ஆயிரம் மதிப்புள்ள பைக்கை தனது வீட்டு முன்பு நிறுத்தி இருந்தையும் கடந்த 9ம் தேதி மர்மநபர் திருடி சென்று உள்ளார். இது குறித்து சுகுமாரும் போலீசில் புகார் அளித்துள்ளார்.

    இந்த நிலையில் போலீசார் வழக்குபதிவு செய்து பைக் திருடனை தேடி வந்த நிலையில் கிருஷ்ணகிரி டவுன் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பைக்கில் வந்த நபரை விசாரித்தபோது கர்நாடகா மாநிலம், பங்காரூபேட்டை பகுதியை சேர்ந்த முனிராஜ் மகன் பிரவின்(23) என்பதும், மற்றும் சரவணன், சுகுமார் ஆகியோரின் பைக்கை திருடியது தெரியவந்தது. 

    இதனையடுத்து போலீசார் 2 பைக்குகளையும் பறிமுதல் செய்து பிரவினை கைது செய்தனர்.
    வள்ளியூரில் பகுதியில் பைக் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 4 பைக்குகளை மீட்டனர்.
    வள்ளியூர்:

    வள்ளியூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக பைக் திருட்டு போவது தொடர்ந்து வந்தது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் வள்ளியூர் போலீசில் புகார் செய்தனர். 

    புகாரில் தேரைகுளம் கல்யாணசுந்தரம் என்பவரது மகன் சிவக்குமார் (வயது22) என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தனர். 

    இதையடுத்து போலீசார் சிவக்குமாரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அப்பகுதியில் பைக் திருடியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 4 பைக்குகளை மீட்டனர்.
    ×